இடைக்கால நிர்வாகம் குறித்த திட்டம் தயார்: இலங்கை
கொழும்பு:
வட-கிழக்கு இலங்கையில் புலிகளின் தலைமையில் இடைக்கால நிர்வாகம் அமைப்பதற்கான செயல் திட்டத்தை("concrete proposals") உருவாக்கியுள்ளதாக அந் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான இலங்கை அரசின் குழுத் தலைவரும் அரசியல் சட்டத்துறை அமைச்சருமானபெரிஸ் இதனை இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்த செயல் திட்டம் அடுத்த சில நாட்களில் விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தத் திட்டத்தில் உள்ள விவரங்கள் குறித்து விளக்க மறுத்துவிட்ட பெரிஸ், ஏற்கனவே இருமுறை எங்களால்சமர்பிக்கப்பட்டு புலிகளால் நிராகரிக்கப்பட்ட செயல் திட்டங்களின் கார்பன் காப்பி அல்ல இது. இதில் புலிகளின்முக்கிய கோரிக்கைகளுக்கு பதில் உள்ளது.
இது இறுதியான திட்டமும் அல்ல. இடைக்கால நிர்வாகம் எப்படி இருக்கலாம் என்பது குறித்த விரிவானவிளக்கங்கள் இதில் உள்ளன. இதில் புலிகள் சொல்லும் மாறுதல்களை செய்து இறுதியான திட்டம் தயாரிக்கப்படும்என்றார்.
இலங்கை அரசுடன் 6 சுற்று பேச்சு நடத்திய புலிகள் கடந்த ஏப்ரலில் பேச்சுவார்த்தைகளில் இருந்துவிலகிவிட்டனர். உருப்படியான செயல் திட்டம் ஏதும் இல்லாமல் பேச்சு நடத்துவதும், தமிழர் பகுதியில்இடைக்கால சுதந்திர நிர்வாகத்தை அமைக்காமல் எந்தவிதமான ஆலோசனைகள் நடத்துவதும் வெட்டி வேலைஎன புலிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.












Click it and Unblock the Notifications