ஜெ- சசிக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றத்தின் ஆயுள் நீட்டிப்பு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான வழக்குகளை விசாரித்து வரும் முதலாவது தனி நீதிமன்றத்தின் காலம்முடிவடைவதையொட்டி அதன் ஆயுட்காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா மற்றும் முந்தைய அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களைவிசாரிக்க கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 3 தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. மீண்டும் ஆட்சிக்கு வந்தஅதிமுக அரசு இதில் இரண்டு நீதிமன்றங்களை மூடிவிட்டது.
முதலாவது தனி நீதிமன்றம் மட்டுமே செயல்பட்டு வந்தது. இதன் ஆயுட்காலமும் முடிவடைய உள்ளது. இதில் தான்ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு உள்ளிட்ட பல்வேறுவழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் இந்த தனி நீதிமன்றத்தின் ஆயுட்காலத்தை மேலும் 1 ஆண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவுபிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications