தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச பயிற்சியாளர்கள்: ஜெ. உத்தரவு
சென்னை:
தமிழகத்தின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி தர முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு விளையாட்டுகளிலும் சிறப்பான நிலையை எட்டியுள்ளவர்களைஅடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
இதுவரை 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை இன்று தலைமைச் செயலகத்துக்கு வரவழைத்தஜெயலலிகா பல்வேறு உதவிகளை வழங்கினார்.
துப்பாக்கிச் சுடுவதில் மிகச் சிறந்த வீரரான தரிணிக்கு புதிய துப்பாக்கி வாங்க ரூ. 1 லட்சத்தை ஜெயலலிதா இன்றுவழங்கினார்.
அதே போல ஸ்குவாஷ் விளையாட்டில் முன்னணி வீராங்கனையான ஜோஸ்னா சின்னப்பாவுக்கு அமெரிக்காவில்3 வார பயிற்சி தரவும் த்தரவிடடார். இதற்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் எனவும் அறிவித்தார்.
படகு சவாரியில் தமிழகத்தின் முன்னணி வீரரான சந்தீபுக்கு புதிய படகு வாங்க ரூ. 80,000த்தை ஜெயலலிதாவழங்கினார்.
ஈட்டி எரிதல் பிரிவில் சிறந்த வீராங்கனையான சரஸ்வதிக்கு நவீன காலணிகள் மற்றும் உடற்பயிற்சிக் கருவிகள்,ஈட்டிகள் வாங்க ரூ. 30,000 வழங்கப்பட்டுள்ளது.
நீச்சல் வீரர் ஜோஸ்வா ஜோசபுக்கு பெங்களூரில் பயிற்சி தருவதற்கும் முதல்வர் உத்தரவிட்டார்.
மேலும் இது போன்ற சிறந்த வீரர்களை அடையாளம் காணுமாறும், அவர்களுக்கு அந்தந்தப் பிரிவைச் சேர்ந்தசர்வதேச பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி தருமாறும் அதிகாரிகளுக்கு ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இது தவிர பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சென்னையைச் சேர்ந்த 4 பெண் குழந்தைகளுக்கு தலாரூ. 15,000 வழங்கினார். தர்மபுரியில் முன்னாள் திமுக அமைச்சர் முல்லைவேந்தன் தலைமையில் நடந்த கூட்டத்தில்வெடிவிபத்து ஏற்பட்டதில் பலியான தஸ்தகீர் என்ற வாலிபரின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் உதவியையும்ஜெயலலிதா வழங்கினார்.
நெல்லை மாவட்டத்தில் ரெளடியால் முகத்தில் திராவகம் வீசப்பட்ட ஜீனாகுமாரி என்ற பெண்ணுக்கு ரூ.50,000த்தை சிகிச்சைக்காக வழங்கினார் முதல்வர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications