For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரபாகரன் நீதிமன்றத்தில் ஆஜராக விளம்பரம் வெளியிட உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விளம்பரம் வெளியிட இலங்கை அரசுபத்திரிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கமாக விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்தபோது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேதலைமையிலான இலங்கை அரசு, அதனுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டது செல்லாது என்று கூறிஜனதா விமுக்தி பெரமுனா மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் வழக்குத் தொடர்ந்தன.

இதை விசாரித்த நீதிமன்றம், கடந்த மே 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிரபாகரனுக்கு சம்மன் அனுப்பஉத்தரவிட்டது.

அவரிடம் நேரில் சம்மனைத் தர முடியாது என்பதால் அது தொடர்பாக விளம்பரத்தை வெளியிடுமாறு இலங்கைஅரசின் பத்திரிக்கைக்கு (Associated Newspapers of Ceylon Limited) நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால்,அந்த விளம்பரத்தை வெளியிட பத்திரிக்கை மறுத்துவிட்டது.

இதையடுத்து அந்த விளம்பரத்தை வெளியிடுமாறு இப்போது மீண்டும் அரசு பத்திரிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது. நீதிபதி ஷிரானி திலகவர்தனே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் உத்தரவைப்பிறப்பித்தது.

1.6 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை:

இதற்கிடையே இலங்கையில் குடியுரிமை இன்றி வசித்து வரும் 1,68,000 இந்திய வம்சாவளியினருக்கு குடியுரிமைவழங்க அந் நாட்டின் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

1983ம் ஆண்டுக்குப் பின் பல்வேறு காரணங்களால் இந்தியாவுக்குத் திரும்ப முடியாத 84,141 பேருக்கும், 1964ம்ஆண்டுக்குப் பின் இலங்கையில் பிறந்த இந்திய வம்சாவளியினர் 84,000 பேருக்கும் குடியுரிமை வழங்க அந் நாடுமுடிவெடுத்துள்ளது.

19ம் நூற்றாண்டில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள், பெரும்பாலும் தமிழர்கள், தோட்டத் தொழிலாளர்களாகஇலங்கைக்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கொண்டு செல்லப்பட்டனர். இந்தத் தமிழர்களின் எண்ணிக்கைநாட்டின் மக்கள் தொகையில் 5.5 சதவீதமாகும்.

இலங்கையையே பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களின் எண்ணிக்கை 12.5 சதவீதமாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X