வேலைபார்த்த டாக்டரிடமே ரூ. 4.6 லட்சம் திருடிய டிரைவர் கைது
கோயம்புத்தூர்:
தான் வேலை பார்த்த டாக்டரிடமே ரூ. 4.6 லட்சத்தைத் திருடிய கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பர்கூரைச் சேர்ந்த ஒரு டாக்டர் செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதற்காக காரில் கோவைக்கு வந்தார். தன்னுடன் ரூ.4.6 லட்சமும் கொண்டு வந்தார். காரை டிரைவர் செல்வராஜ் என்ற பாபு ஓட்டி வந்தார்.
கோவையில் ஒரு ஆட்டோமொபைல் டீலரிடம் கார்கள் குறித்து அவர் பேசிக் கொண்டிருந்தபோதே அவரிடம்இருந்த பையை நைசாக எடுத்துக் கொண்டு டிரைவர் பாபு அங்கிருந்து தப்பிவிட்டார்.
இதையடுத்து டாக்டர் உடனே போலீசில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி செல்வராஜை கைதுசெய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது இதே போல பல குற்றங்களை அவர் செய்திருப்பது தெரியவந்தது.
10 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் டாக்டரிடம் வேலை பார்த்தபோது அவரையே கடத்திச் சென்று கற்பழிக்கமுயன்றதையும், இன்னொரு வீட்டில் ரூ. 3.5 லட்சம் பணம் மற்றும் ரூ. 50,000 மதிப்புள்ள நகைகளைக்கொள்ளையடித்ததையும் செல்வராஜ் ஒப்புக் கொண்டார்.
மேலும் தனது மனைவியையும் தானே விஷம் வைத்துக் கொன்றதாகவும் கூறி போலீசாரையேஅதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். இதையடுத்து இந்த வழக்குகள் குறித்து உடனடியாக விசாரைணைக்கு கோவைமாநகர கமிஷ்னர் சஞ்சய் அரோரா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications