அயோத்தி: சங்கராச்சாரியார்- இஸ்லாமிய சட்ட வாரியம் இடையே பேச்சு தொடர்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அயோத்தி விவகாரத்தில் இஸ்லாமிய சட்ட வாரியத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாக காஞ்சிசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்.

அயோத்தியில் கோவில் கட்டும் வகையில் நிலத்தை இஸ்லாமியர்கள் விட்டுத் தர வேண்டும் என்ற திட்டத்தைசங்கராச்சாரியார் இஸ்லாமிய சட்ட வாரியத்திடம் முன் வைத்தார். ஆனால், அதை வாரியம் ஏற்ற மறுத்துவிட்டது.

அதே நேரத்தில் சங்கராச்சாரியாருடன் இந்த விவகாரம் குறித்துப் பேச எப்போதும் தயாராக இருப்பதாகஇஸ்லாமிய சட்ட வாரியம் அறிவித்தது.

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய சங்கராச்சாரியார், இஸ்லாமிய சட்ட வாரியத்துடன் தொடர்ந்து சில தூதர்கள்மூலம் பேச்சு நடத்தி வருகிறேன். சமரசத் திட்டம் தொடர்பாக நான் முதலில் அனுப்பிய கடிதத்தை சட்ட வாரியம்ஏற்றது.

ஆனால், இரண்டாவதாக நான் அனுப்பியிருந்த கடிதத்தில் காசி, மதுரா கோவில்களின் விவகாரங்களையும்குறிப்பிடிருந்தேன். அந்தக் கோவில்களின் அருகே உள்ள பிரச்சனைக்குரிய மசூதிகளையும் விட்டுத் தர வேண்டும்என்று குறிப்பிட்டிருந்தேன்.

அந்த இரண்டாவது கடிதம் அவர்களுக்கு அனுப்பப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்என்னைச் சந்தித்துப் பேசினர். இதனால் அவர்களது யோசனைப்படியே நான் காசி. மதுரா கோவில்களின்விவகாரங்களையும் கிளப்பியதாக இஸ்லாமிய சட்ட வாரிய நிர்வாகிகள் நினைத்துவிட்டனர்.

இதனால் தான் எனது திட்டத்தை அவர்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்டனர். ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்என்னைச் சந்திக்கும் முன்பே இரண்டாவது கடிதத்தில் இருந்த சமரச திட்ட வரைமுறைகளை நான்உருவாக்கிவிட்டேன். ஆனால், என்னை ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சந்தித்த பின்னர் தான் கடிதத்தை இஸ்லாமியசட்ட வாரியத்துக்கு அனுப்பினேன்.

இதனால் தான் அவர்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டனர். இது குறித்து அவர்களிடமவிளக்கியுள்ளேன். தொடர்ந்து இஸ்லாமிய சட்ட வாரியத்துடன் சில மத்தியஸ்தர்கள் மூலமாக பேசி வருகிறேன்.காசி, மதுரா விவகாரங்களையும் கூட நானே தான் சமரசத் திட்டத்தில் சேர்த்தேன்.

இதில் யாருடைய நிர்பந்தமும் இல்லை என்றார் சங்கராச்சாரியார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+