வெப்சைட் மூலம் ஏலம்: டெல்லி தொழிலதிபரை ஏமாற்றிய மதுரை மாணவர் சிபிஐயிடம் பிடிபட்டார்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

வெப்சைட்டின் பெயரைப் பயன்படுத்தி டெல்லியைச் சேர்ந்தவரை ஏமாற்றி பணம் பறித்த மதுரையைச் சேர்ந்தகல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

இந்தியாடைம்ஸ்.காம் மூலம் பொருள்களை ஏலம் விடும் வசதியைப் பயன்படுத்தி இந்த மோசடி நடந்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரஞ்சித் என்ற தன்னிடம் பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் இருப்பதாகவும், அவற்றைகுறைந்த விலைக்கு ஏலம் விடத் தயாராக இருப்பதாகவும் இந்தியாடைம்ஸ்.காம் ஏலம் விடும் பிரிவில்அறிவித்திருந்தார். மேலும் சில செல்போன்களின் படங்களையும் அந்தப் பிரிவில் வெளியிட்டிருந்தார்.

இதைப் பார்த்த டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சச்சின் என்பவர் ரஞ்சித்தை தொடர்பு கொண்டார். ஒருசெல்போனை ஏலத்தில் வாங்க முன் வந்தார். இதையடுத்து இருவரும் இ-மெயில் மூலம் தொடர்பு கொண்டனர்.

ஒரு செல்போனைக் குறிப்பிட்டு இருவரும் ஏலம் பேசினர். இறுதியில் ரூ. 3,5000க்கு செல்போனை சச்சினுக்குவிற்க ரஞ்சித் முன் வந்தார். இதையடுத்து ரூ. 3,500யை டி.டியாக அனுப்புமாறு ரஞ்சித் மெயில் அனுப்பினார்.அதை நம்பிய சச்சின் பணத்தை டி.டி. எடுத்து அனுப்பினார்.

ஆனால், அதைப் பெற்றுக் கொண்ட ரஞ்சித் செல்போன் எதையும் அனுப்பவில்லை. இதையடுத்து டெல்லிபோலீசில் சச்சின் புகார் செய்தார். இந்த வழக்கை போலீசார் சிபிஐயிடம் ஒப்படைத்தனர்.

விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் மதுரைக்கு விரைந்து ரஞ்சித்தை கைது செய்தனர். இது போலவே மேலும்பலரையும் ரஞ்சித் ஏமாற்றி இருப்பதாகக் கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை சிபிஐ தனது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்கவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+