For Daily Alerts
Just In
குண்டர் சட்டத்தின் கீழ் திமுக கவுன்சிலர் கைது
சேலம்:
சேலம் மாநகராட்சி திமுக கவுன்சிலர் ராமலிங்கம், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனால் அவர்ஓராண்டுக்கு சிறையில் அடைக்கப்படுவார்.
சேலம் மாநகராட்சியின் 48-வது வார்டு உறுப்பினராக இருப்பவர் ராமலிங்கம். இவர், கடந்த மே 5ம் தேதி நடந்தசீனிவாசன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக ராமலிங்கம் அறிவிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல்துறை ஆணையர் சுனில் குமார்உத்தரவிட்டார். இதையடுத்து செவ்வாப்பேட்டை காவல்துறையினர் கவுன்சிலர் ராமலிங்கத்தை கைது செய்துசிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் ஒரு வருடத்துக்கு ஜாமீன் கூட கிடைக்காது. விசாரணையேஇல்லாமல் ஒரு வருடம் உள்ளே வைத்திருக்க முடியும்.


