இலங்கை அகதிகள்- கிராமத்தினர் பயங்கர மோதல்: பலர் படுகாயம்- 35 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை அருகே அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் கிராமத்தினருக்கும் இடையே பயங்கரமோதல் நடந்தது. இதில் பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சண்டையில் அரசு பஸ் உடைக்கப்பட்டது.

இதையடுத்து இலங்கைத் தமிழர்கள் 18 பேர் உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த தமிழர்கள் தமிழகத்தின் பல்வேறுபகுதிகளிலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மதுரை அருகே உள்ள திருவாதவூர் கிராமத்தில் குடியிருக்கும் அகதிகளுக்கும், திருவாதவூர் கிராமத்தினருக்கும்இடையே பஸ்களில் இடம் பிடிப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டு வந்தது. மேலும் இந்தக் கிராமத்தில் நடந்துவரும் திருட்டுக்களுக்கு அகதிகளை கிராம மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

மதுரை பெயார் பஸ் நிலையத்திலிருந்து கிளம்பும் பஸ்களில் இடம் பிடிப்பதில், கிராமத்தினரும் அகதிகள்மோதுவது வழக்கமாம்.

சனிக்கிழமையும் இதுபோல பெரியார் பஸ் நிலையத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருவாதவூரை பஸ்நெருங்கியதும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் தீவிரமானது.

பஸ்சிலேயே இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். உடனே டிரைவர் பஸ்ஸை நிறுத்தினார்.ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட இரு தரப்பினரும் பஸ்ஸை விட்டு இறங்கியும் மோதிக் கொண்டனர்.

அதில் சிலர் பஸ்ஸையும் கல் வீசித் தாக்கத் தொடங்கினர். இதில் பஸ் பலத்த சேதமடைந்தது.

இரு தரப்பினரும் அடித்துக் கொண்டதில் அப்பாவி பஸ் பயணிகள் பலரும் காயமடைந்தனர். இரு தரப்பிலும்பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து மோதலில் ஈடுபட்ட 35 பேரைக் கைது செய்தனர். இவர்களில் 18 பேர்அகதிகளாவர்.

மோதலில் நிக்கல்சன் ராபர்ட், ஜான் கென்னடி, செபாஸ்டியன் ஆகிய அகதிகள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+