தமிழில் அர்சனை செய்ய மறுப்பு: அர்ச்சகர் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

கரூர்:

தமிழில் அர்ச்சனை செய்ய மறுத்த கரூர் பசுபதீஸ்வர சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பாலு குருக்கள் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன் கோயிலுக்கு கரூர் காந்திகிராமத்தைச் சேர்ந்த கார்திகேயன் மற்றும் அவரது மனைவ இக்கோவிலுக்கு வந்தனர். மூலவர் சன்னதியில் இருந்தா பாலு குருக்களிடம், அர்ச்சனை சீட்டை தந்த அவர்கள், தமிழில்அர்ச்சனை செய்யுமாறு கூறினர்.

அப்போது, தமிழில் அர்ச்சனை செய்ய முடியாது என மறுத்த பாலு குருக்கள், அவர்களைத் தரக் குறைவாகவும்திட்டியதாகத் தெரிகிறது.

இதையடுத்து அந்தத் தம்பதியும், பாவேந்தர் ஆண்கள் சுய உதவிக்குழு நிர்வாகிகளும் கோயிலுக்குச் சென்றுஅங்கிருந்த மூத்த குருக்கள் ரத்தினசிவத்திடம் முறையிட்டனர். ஆனால், அவரோ கோயிலை விட்டுவெளியேறுங்கள், பூட்ட வேண்டும் என அவர் கூறி விரட்டிவிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து அறிந்த தமிழ் ஆர்வலர்கள் கோயிலுக்குச் சென்று இந்த விவகாரத்தைக் கிளப்பினர். அப்போதுநடந்த சம்பவத்தை ஒப்புக் கொண்டார் பாலு குருக்கள். மேலும் இது தொடர்பாக அறநிலையத்துறை எடுக்கும்நடவடிக்கைக்கு உட்படுவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, பாலு குருக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பாவேந்தர் ஆண்கள் சுயஉதவிக்குழு நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அண்ணாமலையையும் சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

இதையடுத்து கோயில் செயல் அலுவலர் மனோகரன் மூலமாக பாலு குருக்கள் மீது நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. குருக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+