கலெக்டர் கார் மீது பஸ் மோதல்: டிரைவர் கவலைக்கிடம்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தீரஜ்குமார், பெரும் விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். ஆனால், டிரைவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவராக உள்ள தீரஜ்குமார், சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.அவரது கார் செஞ்சி அருகே வந்தபோது, எதிரே வந்த ஒரு பஸ் கார் மீது மோதியது. இதில் கார் டிரைவரின்தலையில் பலத்த அடிபட்டது, இதில் அவர் படு காயமடைந்தார்.
தீரஜ் குமாருக்கு வலது காதில் லேசான காயம் ஏற்பட்டது. டிரைவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகமருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications