தீயணைப்பு படையில் பெண் அதிகாரிகள் நியமனம்: நாட்டிலேயே முதல்முறை
சென்னை:
முதலில் அனைத்து மகளிர் காவல் நிலையம். அடுத்து மகளிர் போலீஸ் பட்டாலியன். பிறகு மகளிர் கமாண்டோபடை, இப்போது மகளிர் தீயணைப்புப் படை அதிகாரிகள். இவ்வாறு மகளிருக்கு முக்கியத்துவம் தருவதில்முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகள் தொடருகின்றன.
இந்தியாவிலேயே முதல் முறையாக கடந்த ஜெயலலிதா ஆட்சியின்போது, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்உருவாக்கப்பட்டன.
பின்னர் பெண் காவலர்களை வைத்து தனி படைப் பிரிவு உருவாக்கப்பட்டது. சமீபத்தில் பெண் வீராங்கனைகளைக்கொண்ட கமாண்டோ படை உருவானது.
அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு இந்தியாவிலேயே முதல் முறையாக என்ற அடைமொழியுடன்இன்னொரு சாதனையைப் படைத்துள்ளார் ஜெயலலிதா.
தேசிய அளவிலும், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையிலும், முதல் முறையாக இரண்டுபெண்களுக்கு அதிகாரிகள் அளவிலான பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
பிரியா என்பவர் நாகப்பட்டனம் மாவட்ட தீயணைப்பு அதிகாரியாகவும், மீனாட்சி விஜயக்குமார் சென்னைதாம்பரத்தில் உள்ள தீயணைப்பு பயிற்சி மையத்தின் மாவட்ட தீயணைப்பு அதிகாரியாகவும்நியமிக்கப்பட்டுள்ளனர்.
தீயணைப்புப் படையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாநில உள்துறையையும் தனது பொறுப்பில் வைத்துள்ளமுதல்வர் ஜெயலலிதா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தீயணைப்பு உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகளை களத்தில் இறங்கி செய்ய வேண்டிய பணியை உள்ளடக்கிய இந்தபதவிகளுக்கு இதுவரை எந்தப் பெண்ணும் நியமிக்கப்பட்டதில்லை.
இந்தப் பெருமையைப் பெற்றுள்ள முதல் பெண்மணிகள் இவர்கள்தான். இருவரும் தமிழ்நாடு அரசுப் பணிதேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஒரு சில இடங்களில்தான் பெண்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும்அவர்களில் யாரும் அதிகாரிகள் அந்தஸ்தில் இல்லை.
எனவே தீயணைப்புத் துறையிலும் பெண்களை உயர் பதவியில் அமர்த்திய முதல் மாநிலம் என்ற பெருமைதமிழகத்திற்குக் கிடைத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications