17 தலித்கள் உயிர்விட்ட மாஞ்சோலை போராட்டத்தின் 4-ம் ஆண்டு நினைவு நாள்
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் நடந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தின்போது,போலீசாரின் தாக்குதலால், 17 தலித் இன மக்கள் தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிர்விட்டதன் 4-வது ஆண்டுநினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
4 ஆண்டுகளுக்கு ஜூலை 23ம் தேதி, மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம்நடந்தது. ஊர்வலமாகச் சென்ற தலித் இனத் தொழிலாளர்கள் மீது போலீஸார் கண்மூடித்தனமாகத் தடியடி தாக்குதல்நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக ஏராளமான தொழிலாளர்கள் அருகில் இருந்த தாமிரபரணி ஆற்றில்குதித்தனர். நீச்சல் தெரியாத 17 பேர் பரிதாபமாக ஆற்றில் மூழ்கி உயிர் விட்டனர்.
இந்தச் சம்பவத்தின் 4-ஆண்டு நினைவு தினம் நெல்லையில் நடந்தது. புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் ஊர்வலமாக சம்பவம் நடந்த ஆற்றுப் பகுதிக்குச் சென்று அங்கு மலர்அஞ்சலிசெலுத்தினர்.
பின்னர் அங்கு திரண்டிருந்த கூட்டத்திற்கு மத்தியில் அவர் பேசுகையில், இந்த இடத்தில் நினைவிடம் அமைக்கஅரசு அனுமதி அளித்து, உரிய இடத்தை ஒதுக்க வேண்டும் என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவனும் இந்த இடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். இதுதவிர இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.
மாஞ்சோலைப் போராட்டத்தின்போது ஆற்றில் விழுந்து உயிர் விட்டவர்களில் ஒரு தாய் தனது ஒரு வயதுகுழந்தையான விக்னேனுடன் நீரில் மூழ்கினார். அதில் அக் குழந்தையும் பலியானது குறிப்பிடத்தக்கது.


