நான் சிவாஜியின் ரசிகன்: தேவே கெளடா
மதுரை:
நடிகர் திலகம் சிவாஜிகணேசனை எனக்கு மிகவும் பிடிக்கும். மொழி புரியாவிட்டாலும் சிவாஜியின் படங்களைபார்க்காமல் விட மாட்டேன் என்று முன்னாள் பிரதமர் தேவே கெளடா கூறினார்.
சிவாஜி-பிரபு அறக்கட்டளை சார்பில் மதுரையில் நடந்த மாணவர்களுக்கு கல்வி உதவியளிக்கும் விழாவில்கெளடா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, சிவாஜி கணேசனின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. எந்தப் பாத்திரத்தில் நடித்தாலும் அந்தபாத்திரமாகவே மாறி விடும் ஆற்றல் அவருக்கு மட்டுமே உண்டு. சிவாஜி நடித்த பராசக்தி, வீரபாண்டியகட்டபொம்மன் ஆகிய படங்கள் இன்றும் எனது நினைவில் நிற்கின்றன. மறக்க முடியாத படங்கள் அவை.
தமிழ் எனக்கு அவ்வளவாக புரியாவிட்டாலும் கூட சிவாஜியின் தீவிர ரசிகன் நான். அவர் நடித்த ஒரு படத்தையும்விடாமல் பார்த்து விடுவேன் என்றார் கெளடா.
கர்நாடகத்தைச் சேர்ந்த அனைவருமே அந்த மாநிலத்தி சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரை மட்டுமே புகழுவார்கள்.வேறு யாரையாவது புகழ்ந்து பேசினால், அடுத்த நாளே அவர்களை ராஜ்குமார் ரசிகர்கள் விமர்சிப்பது வழக்கம்.
ஆனாலும் கெளடா, சிவாஜியை மிகவும் வெளிப்படையாக புகழ்ந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.


