சித்ரா மானபங்க வழக்கு: போலீஸ் காவலில் பா.ஜ.க. தொழிலதிபர்
கோவை:
கேரளாவைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்ணை பலாத்காரம் செய்து, ஆபாசப் படம் எடுத்தாக கைதுசெய்யப்பட்டுள்ள கோவை தொழிலதிபர் உன்னி கிருஷ்ணன் 2 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
சித்ரா என்ற குடும்பப் பெண்ணுக்கு பா.ஜ.க. தொழிலதிபரான உன்னி கிருஷ்ணன் மயக்க மருந்துகொடுத்து, நர்ஸ் ஹாலிக்ஸ் என்பவர் உதவியுடன் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள்எடுத்தார்.
இதையடுத்து சித்ரா கொடுத்த புகாரின் பேரில் உன்னி கிருஷ்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாகஇருந்த நர்ஸ் ஹாலிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டார். அவர்கள் நீதிமன்றக் காவலில்வைக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து உன்னியை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோவை முதலாவது குற்றவியல்நடுவர் அனுமதி கொடுத்தார். உன்னியை போலீசார் கவனிக்கும் விதத்தில் கவனித்துவிஷயங்களை வாங்குவார்கள் என்று தெரிகிறது.
ஆனால், போலீசாரையே விலைக்கு வாங்கும் முயற்சியில் தனது பண மற்றும் அரசியல் பலத்தைஉன்னி பயன்படுத்தி வருவதாக சித்ரா புகார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications