காங்கிரஸ் கோஷ்டிப் பூசல் வெடித்தது: காஞ்சிரபுரத்தில் அடிதடி- வேட்டிகள் கிழிப்பு
காஞ்சிபுரம்:
ராஜிவ் காந்தி பிறந்த நாளைக் கொண்டாடுவது தொடர்பாக காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் செயல் வீரர்கள்கூட்டத்தில் பயங்கர அடிதடி நடந்தது. இதில் பல தொண்டர்களுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.
ராஜிவ் பிறந்த நாளைக் கொண்டாடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினரின் கூட்டம் இன்று காலை நடந்தது.அப்போது வாசன் கோஷ்டிக்கும் இளங்கோவன் கோஷ்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாசன் கோஷ்டியைச் சேர்ந்த காஞ்சிபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி செயலாளர் குப்பனுக்கும் இளைஞர் அணித்தலைவர் செல்வத்துக்கும் இடையே வாடா, போடா என்று சண்டை நடந்தது. இவர்களுக்கு ஆதரவாக அவரவர்கோஷ்டிகளின் ஆட்களும் களமிறங்கினர்.
இதனால், வாக்குவாதம் முற்றி அடிதடி ஏற்பட்டது. இதில் பலருடைய வேட்டிகள உருவப்பட்டன. சேர்கள் பறந்தன.டியூப் லைட்கள் உடைக்கப்பட்டன. சட்டைகள் கிழிக்கப்பட்டன.
ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டதில் பலருக்கும் ரத்தக் காயம் ஏற்பட்டது. நெடு நேரம் நடந்தஇந்த மோதல், தொண்டர்கள் களைப்படைந்ததால் தானாகவே முடிவுக்கு வந்தது.
இதன் பின்னர் காஞ்சிபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி செயலாளர் குப்பன் அரசு மருத்துவமனையில் போய் சேர்ந்துகொண்டு இளைஞர் அணித் தலைவர் செல்வத்தின் மீது போலீசில் புகார் தந்தார். பதிலுக்கு செல்வமும்மருத்துவமனையில் போய் சேர்ந்தார். தன்னை குப்பன் தாக்கியதாக அவரும் பதிலுக்கு புகார் தந்தார்.
இதையடுத்து மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரிடமும் பேசி புகார்களைத் திரும்பப் பெறச் செய்தனர். இந்தபுகார்களை வைத்து இருவரையும் பிடித்து உள்ளே போட அரசு உத்தரவிடலாம் என்பதால் மூத்த தலைவர்கள்தலையிட்டு புகார்களை வாபஸ் பெறச் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications