தேர்தல் கமிஷனர் லிங்டோவுக்கு மகசேசே விருது

Subscribe to Oneindia Tamil

மணிலா:

இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் ஜே.எம். லிங்டோ, ஆந்திரா மாநில சமூக சேவகி சாந்தா சின்ஹாஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான மகசேசே விருது வழங்கப்படவுள்ளது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டின்முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே நினைவாக வழங்கப்படும் மகசேசே விருது ஆசியாவின் நோபல் பரிசு என்றுவர்ணிக்கப்படுகிறது.

தீவிரவாதம், மக்களிடையே நிலவிய அவ நம்பிக்கைக்கு மத்தியில் ஜம்மு-காஷ்மீரில் சிறப்பான முறையில்தேர்தலை நடத்திக் காட்டியதற்காக இந்தியத் தலைமைதேர்தல் கமிஷனர் ஜே.எம்.லிங்டோவுக்கு இந்த விருதுவழங்கப்பட்டுள்ளது.

அதே போல ஆந்திராவில் குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றி வரும் சாந்தா சின்ஹாவுக்கும்இந்த விருது வழங்கப்படுகிறது.

அன்னை தெரஸா, ஜெயப்பிரகாஷ் நாராயணன், முன்னாள் தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன், பத்திரிக்கையாளர்அருண் ஷோரி(தற்போது மத்திய அமைச்சர்), கிரண் பேடி போன்றோர் இதற்கு முன் மகசேசே விருதுபெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

காஷ்மீர் தேர்தலைவிட குஜராத் தேர்தலில்போது தான் லிங்டோ அதிக பிரபலமாகப் பேசப்பட்டார். குஜராத்தில்மதக் கலவரம் நடந்தபோதே சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த பா.ஜ.க. முதல்வர் நரேந்திர மோதிதிட்டமிட, அதைத் தடுத்தார் லிங்டோ.

மத்திய அரசின் தீவிரமான நெருக்குதலுக்கும் பணியாமல் தேர்தலை ஒத்தி வைத்தார். இதனால், இவரை கிருஸ்தவர்என்றும் இந்துக்களின் விரோதியாக இவர் செயல்படுவதாகவும் நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ.கவினர்வர்ணித்தனர். ஆனால், இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தேர்தலை அமைதியாக நடத்திக்காட்டினார்.

இதன் பின்னர் காஷ்மீரில் மிகச் சிறப்பான முறையில் தேர்தலை நடத்திக் காட்டி உலக நாடுகளை ஆச்சரியத்தில்மூழ்கடித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+