For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கை கோர்த்தனர் தமிழக- ஆந்திர எம்.பிக்கள்: ஒரு வாரத்தில் கூடுகிறது காவிரி கண்காணிப்புக் குழு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

நதி நீர் பிரச்சனை தொடர்பாக ராஜ்யசபாவில் கர்நாடகத்துக்கு எதிராக தமிழக மற்றும் ஆந்திர எம்.பிக்கள்கைகோர்த்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜ்யசபாவில் அதிமுக எம்.பியான பி.ஜி.நாராயணன் காவிரி பிரச்சினை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்ஒன்றை கொண்டு வந்து பேசினார்.

அவர் பேசுகையில், கர்நாடகத்தின் விரோதமான போக்கால், தமிழ்நாடு இன்னொரு தார் பாலைவனமாகிவருகிறது. காவிரி நடுவர் மன்ற ஆணையை அமல்படுத்துவதன் மூலம் சட்டத்தை மீறிய ஒரு மாநிலமாக கர்நாடகம்தண்னை காட்டிக் கொண்டு இருக்கிறது என்றார்.

உடனே கர்நாடக எம்.பிக்கள் எழுந்து அவரை நோக்கி கூச்சலிட்டனர். அப்போது தமிழக, ஆந்திர எம்.பிக்கள்எழுந்து நாராயணுக்கு ஆதரவாகப் பேசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தைப் போலவேஆந்திராவுக்கும் நீர் விடாமல் கர்நாடகம் ஏமாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய பி.ஜி.நாராயணன்,

ஆந்திராவுக்கும் கர்நாடகம் தண்ணீர் கொடுக்க மறுத்து வருகிறது. தமிழகத்திலும் ஆந்திராவிலும் சேர்த்து 81எம்.பிக்கள் உள்ளோம். கர்நாடகத்தின் சதியை நாங்கள் 81 பேரும் சேர்ந்து முறியடிப்போம்.

காவிரி பிரச்சினை எங்களுக்கு எங்களுக்கு வாழ்வா, சாவா பிரச்சினை மாதிரி. நீதிமன்றமும் ஆணையமும்லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு நீதி வழங்க தவறிவிட்டன. தமிழ்நாட்டில் காங்கிரசுக்கும், பாரதீயஜனதாவுக்கும் ஆதரவு இல்லாததால் தான் இந்த விவகாரத்தில் அக்கறை காட்ட இந்த இரு கட்சிகளமேமறுக்கின்றன.

வாஜ்பாய் அரசு இந்த பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓட்டு வங்கிகளை மனதில்வைத்தே மத்திய அரசு செயல்படுகிறது என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய அதிமுக எம்.பியான ஜோதி, உச்ச நீதிமன்றம், காவிரி நதி நீர் ஆணையம், நடுவர்மன்றம் ஆகிய எந்த அமைப்பின் உத்தரவையும் மதிக்காத கர்நாடகத்தின் மீது, அரசியல் சட்டத்தின் 355-வதுபிரிவை மத்திய அரசு பயன்படுத்த வேண்டும். அணைகளை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்என்றார்.

இதையடுத்துப் பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சரண் சேத்தி, பற்றாக்குறை காலங்களில் காவிரிநீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக புதிய வழிகாட்டு முறைகளை உருவாக்குவது தொடர்பாக விவாதிக்ககாவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம் ஒரு வாரத்துக்குள் கூட்டப்படும் என்று அறிவித்தார்.

அதே நேரத்தில் அரசியல் சட்டத்தின் 355வது பிரிவைப் பயன்படுத்தி கர்நாடக அணைகளை மத்திய அரசு தனதுகட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் யோசனை ஏதும் எங்ளுக்கு இல்லை. இந்த விவகாரத்தை சுமூகமாகவே தீர்க்கவிரும்புகிறோம் என்றார்.

அதே போல கிருஷ்ணா நீரையும் கர்நாடகம் வழங்க மறுப்பதை எதிர்த்து ஆந்திர எம்.பிக்களும் மக்களவையும்பெரும் அமளியைக் கிளப்பினர். இந்த விவகாரத்தில் வாஜ்பாய் தலையிட வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரி வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X