இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 தமிழக மீனவர்கள் தங்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த மார்ச் 6ம் தேதி நாகை மாவட்டம் அக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள், 4 இயந்திரப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர்.
கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் அங்கு வந்து 21பேரையும் சிறை பிடித்தனர்.
அவர்களில் 4 பேர் யாழப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சுந்தர், சந்திரன், சிவானந்தம், பாலு ஆகிய அந்த நான்கு பேரும் தங்களை விடுவிக்க வேண்டும் என்றுதிங்கள்கிழமை முதல் உண்ணாவிரதம் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications