ஜனனியின் மனு மீது ஆகஸ்ட் 4ல் விசாரணை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

ஜனனி எனப்படும் செரினாவின் கார் உள்ளிட்ட பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஒப்படைக்கக் கோரிஅவரது வக்கீல் தாக்கல் செய்துள்ள 3 மனுக்கள் மீது ஆகஸ்ட் 4 ம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.

மதுரையச்ை சேர்ந்த இளம்பெண் ஜனனியும் அவரது தாயார் ரெஜீனாவும் கஞ்சா விற்றதாக கைதுசெய்யப்பட்டனர். அவர்களது காரும், வீட்டில் இருந்த ரூ. 1.40 கோடி பணம் போலீஸாரால் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தப் பணம் சட்ட விரோதமாக சம்பாதித்தது அல்ல என்று ஜனனி கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து காரையும், பணத்தையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமாரிடம் ஜனனியின் வழக்கறிஞர்கள் மனு தாக்கல்செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீது ஆகஸ்ட் 4ம் தேதி விசாரணை நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனனிக்காக நடராஜனின் மிக நெருங்கிய நண்பரும் அதிமுகவைச் சேர்ந்தவருமான வழக்கறிஞர் சங்கரலிங்கம்ஆஜராகி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+