பார்வைக் கோளாறு: மனமுடைந்த பொறியாளர் மலையிலிருந்து குதித்து சாவு
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு மலையிலிருந்து குதித்து மின்வாரிய உதவிப் பொறியாளர் தற்கொலை செய்துகொண்டார்.
சேலம் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவிப்பொறியாளராக பணியாற்றி வந்தார்.
சனிக்கிழமை மாலை ஏற்காடு மலைக்கு வந்த அவர் அங்குள்ள லேடீஸ் சீட் சுற்றுலாப் பகுதியில் வந்தமர்ந்தார். பலமணி நேரம் அங்கேயே அமர்ந்திருந்தார். பின்னர் மழை பெய்யத் தொடங்கியதும், சுற்றுலாப் பயணிகள்அங்கிருந்து அகன்றனர். இதையடுத்து மலை மீதிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார் அன்பழகன்.
ஞாயிற்றுக்கிழமை மாலை தான் அன்பழகனின் தற்கொலை குறித்து போலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்துதீயணைப்புப் படையினர், அன்பழகனின் உடலை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
மழை காரணமாக மீட்புப் பணி தாமதமடைந்தது. கடும் போராட்டத்திற்குப் பின்னர் அன்பழகனின் உடல்மீட்கப்பட்டது.
சம்பவ இடத்திலிருந்து அன்பழகனின் டை, 2 கடிதங்களை போலீஸார் கண்டுபிடித்தனர். தனது மனைவிக்கும்,மனைவியின் சகோதரிக்கும் அன்பழகன் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
அன்பழகனுக்கு சில நாட்களாக பார்வைக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்தார் அவர். சிலநாட்களுக்கு முன்பு திருச்செங்கோட்டில் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் மற்றவர்கள் அவரைக் காப்பாற்றிவிட்டனர். தற்போது ஏற்காடு மலையிலிருந்து குதித்து இறந்து விட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications