ஆக. 22ல் உலகத் தமிழ் இணைய மாநாடு
சென்னை:
சென்னை நகரில் வருகிற 22ம் தேதி 6-வது உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெறவுள்ளது.முதல்வர் ஜெயலலிதா மாநாட்டைத் தொடங்கி வைக்கவுள்ளார்.
இதுகுறித்து மாநில தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம்கூறுகையில், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் தகவல்தொழில்நுட்ப அமைப்பு, கணிணித் தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து இந்த உலக இணையத் தமிழ்மாநாட்டை நடத்தி வருகின்றன.
6-வது மாநாடு சென்னையில் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. 3 நாட்களுக்கு மாநாடு நடக்கும்.மாநாட்டை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைப்பார்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், வீடியோ கான்பரன்சிங் மூலம் உரை நிகழ்த்துவார். மாநாட்டின்போது தமிழ் மென்பொருட்கள், கீ போர்டுகள், பிற தமிழ் சம்பந்தப்பட்ட கணிணிப் பொருட்கள்குறித்த கண்காட்சியும் நடைபெறும்.
உலகம் முழுமைக்கும் பொதுவான தமிழ் மென்பொருளை உருவாக்குவது குறித்து இந்தமாநாட்டின் போது விரிவாக விவாதிக்கப்படும். இதன் மூலம் உலகளவில் அதிக அளவில்பயன்படுத்தப்படும் 2-வது மொழி என்ற பெருமை தமிழுக்குக் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இந்தியா, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா,ஆஸ்திரேலியா, கனடா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து 45க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
பேட்டியின் போது தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் விவேக் ஹரிநாராயணன், தமிழ்இணையப் பல்கலைக்கழக இயக்குநர் பொன்னவைக்கோ, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர்பாலகுருசாமி ஆகியோரும் இருந்தனர்.












Click it and Unblock the Notifications