நதி நீர் விவகாரம்: தமிழகத்துடன் இணைந்து கர்நாடகத்தை எதிர்க்கத் தயார்- நாயுடு
சென்னை:
கர்நாடகத்திடம் இருந்து உரிய நீரைப் பெற தமிழகமும் ஆந்திரமும் இணைந்து போராடும் என ஆந்திர முதல்வர்சந்திரபாபு நாயுடு கூறினார்.
சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நாயுடு விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
கர்நாடகம் சட்ட விரோதமாக அணைகக்ை கட்டி வருகிறது. தனது பங்குக்கும் அதிகமான நீரைப் பயன்படுத்திக்கொண்டு தமிழகத்துக்கும் ஆந்திராவுக்கும் தண்ணீர் தர மறுக்கிறது. கர்நாடக அரசுகள் தொடர்ந்து முரண்டு பிடித்துவருகின்றன. அண்டை மாநிலங்களை மதிப்பதில்லை.
முக்கிய ஆறுகள் தனது நிலப் பரப்பின் ஓடி அண்டை மாநிலங்களை அடைவதால் அந்த நீரை முழுமையாக தானேபயன்படுத்திக் கொள்ள கர்நாடகம் நினைக்கிறது. இதனால் அந்த ஆறுகளை நம்பியுள்ள எங்களிடம்ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அணைகளைக் கட்டி வருகிறது.
இதன் மூலம் தமிழகத்துக்கு காவிரி நீரைத் தர மறுக்கிறது. ஆந்திராவுக்கு அலமாத்தி அணையில் இருந்து நீரைத் தரமறுக்கிறது.
இதை தமிழகமும் ஆந்திரமும் ஒப்புக் கொள்ள மாட்டோம். எங்களுக்கு உரிமையுள்ள நீரைப் பெற இருமாநிலங்களுக்கும் இணைந்து போராடுவோம்.
சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய கிருஷ்ணா நதி நீரை தமிழகத்துக்கு நிச்சயம் தருவோம். இந்தவிஷயத்தில் நாங்கள் பரந்த மனதுடன் செயல்பட்டு வருகிறோம். ஆனால், இந்த ஆண்டு கிருஷ்ணா நதியில்போதிய நீர் இல்லை. இதனால் அணைக் கட்டுகள் கூட வறண்டு கிடக்கின்றன.
மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். மளை பெய்தால் நிச்சயம் தமிழகத்துக்கு தண்ணீர் விடுவோம். அதைஅணையில் தேக்கி வைத்துக் கொள்ள மாட்டோம் என்றார் நாயுடு.
அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கேட்டபோது, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும் என்றார்.
சட்டசபைகளுக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்ற துணைப் பிரதமர்அத்வானியின் யோசனை குறித்து கேட்டபோது, இது தொடர்பாக தேசிய அளவில் விவாதம் நடத்தி தான் எந்தமுடிவையும் எடுக்க வேண்டும். எங்களுக்கு அதில் உடன்பாடு தான். ஆனால், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால்பல சட்டசபைகளை முன் கூட்டியே கலைக்க வேண்டி வரும் என்றார்.












Click it and Unblock the Notifications