பெண்களிடம் வம்பு செய்த போலீசாரை கட்டி வைத்து அடி, உதை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை விரகனூர் பகுதியில் குடிபோதையில் 2 பெண்களிடம் சில்மிஷம் செய்த 2 போலீஸ்காரர்களை பொதுமக்கள் பிடித்து சிறை வைத்தனர்.

பிச்சம்மாள் என்பவன் மகள்களான முருகேஸ்வ, ராணி ஆகியோர் தங்களது உறவினர் அனந்தகுமார்என்பவருடன், சக்கிமங்கலம் நோக்கி சைக்கிளில் போய்க் கொண்டிருந்தனர்.

அப்போது நாகேந்திரன் மற்றும் சக்திவேல் ஆகிய இரு போலீஸ்காரர்கள், விரகனூர் அணை அருகே அவர்களைமடக்கி நிறுத்தினர்.

இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். பெண்களைத் தள்ளிக் கொண்டு போகிறாயா என்று கேட்டுஅனந்தகுமாரைத் தாக்கியுள்ளனர். இரண்டு பெண்களையும் கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்துள்ளனர்.

இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் திரண்டு வந்து இரண்டு போலீஸ்காரர்களையும் பிடித்து அடித்து, உதைத்தனர்.பின்னர் இரு போலீசாரையும் கட்டி வைத்தனர்.

பின்னர் போலீஸார் விரைந்து வந்து இரு போலீஸ்காரர்களையும் மீட்டுச் சென்றனர். அவர்கள் மீது விசாரணைநடத்தப்படும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+