நடிகையின் வீட்டில் காதலர் தற்கொலை
சென்னை:
நடிகையின் வீட்டில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவாலிபரின் தந்தை போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
டிவி தொடர்கள் மற்றும் சில படங்களில் நடித்து வருபவர் பவானி என்ற ஸ்வேதா. இவருக்கும், 20 வயதானராகவேந்திரா என்ற வாலிபருக்கும் காதல் ஏற்பட்டது.
கல்யாணம் செய்து கொண்ட பின்னர் நடிப்பதை விட்டு விட வேண்டும் என்று ஸ்வேதாவை ராகவேந்திராவற்புறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கு ஸ்வேதா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் நேற்று ஸ்வேதாவுக்கும் ராகவேந்திராவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஸ்வேதாவைராகவேந்திரா அடித்துள்ளார். இதில் ஸ்வேதா மயங்கி விழுந்தார். இதனால் அவர் இறந்துவிட்டதாக நினைத்தராகவேந்திரா ஸ்வேதாவின் வீட்டிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாக ராகவேந்திராவின் தந்தை போலீஸில் புகார் செய்துள்ளார்.இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
தனுஷ் நடித்துள்ள திருடா திருடி படத்தில் ஸ்வேதா இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார். தற்கொலைசெய்து கொண்ட ராகவேந்திராவின் தந்தை தெலுங்கு நடிகராவார்.












Click it and Unblock the Notifications