ஜனனியின் ரூ.1.4 கோடி வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்படுமா?: இன்று தீர்ப்பு
மதுரை:
கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, நடராஜனுக்கு நெருக்கமான, ஜனனியிடம் கைப்பற்றப்பட்டரூ.1.4 கோடியை வருமான வரித் துறையிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கில் மதுரை நீதிமன்றம் இன்றுதீர்ப்பு அளிக்கவுள்ளது.
ஜனனியின் மதுரை, சென்னை நீலாங்கரை பங்களாக்களில் கைப்பற்றப்பட்ட பணம், கார் ஆகியவை மதுரைகருப்பாயூரணி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணத்துக்கு உரிய கணக்கு இல்லை என்பதால் அதை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரிவருமான வரித்துறையினர் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் திங்கள்கிழமை விசாரித்தார். அப்போது கைப்பற்றப்பட்டரூ.1.4 கோடிக்கு வருமான வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆராய வேண்டியுள்ளதால், அந்தப் பணத்தைவருமான வரித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என, அந்தத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேலுச்சாமிவாதிட்டார்.
ஆனால், ஜனனி விஷயத்தில் இன்னும் விசாரணையே முடிவடையாததால், பணத்தை வருமான வரித் துறையிடம்ஒப்படைக்கக் கூடாது என அரசுத் தரப்பு வழக்கறிஞர் மோகன் கூறினார்.
ஜனனியின் சார்பில் ஆஜரான, நடராஜனின் நெருங்கிய நண்பரான வழக்கறிஞர் சங்கரபாண்டியன் பேசுகையில்.ஜனனியின் வீட்டுச் சாவியை ஒப்படைத்தால்தான் ஆவணங்களைச் சரிபார்த்து வருமான வரிசெலுத்தப்பட்டுள்ளதா, இல்லையா என்ற விவரத்தை நான் தெரிவிக்க முடியும் என்றார்.
இதையடுத்து, பணத்தை வருமான வரித் துறையிடம் ஒப்படைக்க வேண்டுமா என்பது குறித்த தீர்ப்பை இன்று(செவ்வாய்க்கிழமை) அறிவிப்பதாக நீதிபதி கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications