ஆப்கானிஸ்தானிலிருந்து போதைப் பொருள் கடத்தி சென்னையில் விற்பனை: 3 பேர் கைது
சென்னை:
ஆப்கானிஸ்தானிலிருந்து போதைப் பொருளைக் கடத்தி வந்த 3 பேர் கொண்ட கும்பலை சென்னை போலீஸார்கைது செய்துள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் போதைப் பொருள் நடமாட்டம் இருப்பதாக தெரிய வந்ததையடுத்துபோதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் அங்கு தீவிர விசாரணை நடத்தினர்.
இதில், ரபீக் என்பவர் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, மண்ணடி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில்,போதைப் பொருள் கும்பல் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் மாறுவேடத்தில் அங்கு சென்றனர். போதைப் பொருள் வாங்கச் சென்றவர்கள் போலஅவர்கள் சென்றனர்.
அங்கிருந்த குர்ஷித் மற்றும் ஹம்சா ஆகிய இருவரும், போலீஸாரிடமே ரூ. 1.5 கோடி மதிப்புள்ள பிரெளன் சுகரைவிற்க முன் வந்தனர்.இதைத் தொடர்ந்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து ஹம்சா பல முறை போதைப் பொருளைக் கடத்தி வந்து சென்னையில் விற்றுள்ளதுதெரியவந்தது. இவர் கேரளாவைச் சேர்ந்தவராவார்.
இதில் குர்ஷித் என்பவர் காஷ்மீரைச் சேர்ந்தவர். இருவரும் தங்களைத் தீவிரவாதிகள் என்று கூறி போலீஸாரைமிரட்டியதாகத் தெகிறது. இதைத் தொடர்ந்து இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications