மழை நீர் சேகரிக்க கடன்: வங்கிகளுக்கு ஜெ. உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் மழை நீர் சேகரிப்புக்கு வடிகால் அமைப்பை ஏற்படுத்த பொது மக்களுக்கு கடனுதவி வழங்குமாறுகூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த மாத இறுதிக்குள், தமிழகத்தில் உள்ள வீடுகள், கட்டடங்களில் மழை நீர் வடிகால் வசதியை ஏற்படுத்தவேண்டும் என்று கெடு விதித்துள்ளது தமிழக அரசு. தற்போது இதற்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடனுதவி செய்யஅரசு ஏற்பாடு செய்துள்ளது.
மாநிலத்தில் உள்ள முதன்மை கூட்டுறவு வங்கிகள், வேளாண் கூட்டறவு வங்கிகள் மாவட்ட கூட்டுறவு வங்கிகள் எனஅனைத்துக் கூட்டுறவு வங்கிகளிலும் மழை நீர் வடிகால் அமைப்புக்கு கடனுதவி செய்ய அரசுஉத்தரவிடப்பட்டுள்ளது.
பிற கடன்களுக்கு வசூலிக்கப்படும் அதே வட்டியையே இதற்கும் வசூலிக்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications