காதல் தோல்வி: 5வது மாடியிலிருந்து குதித்து பெண் சாப்ட்வேர் என்ஜினியர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் காதலில் தோல்வியடைந்ததால், 5-வது மாடியிலிருந்து கீழே குதித்து பெண் சாப்ட்வேர் என்ஜினியர்தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் அபிதா. சாப்ட்வேர் என்ஜினியரான இவர் தரமணி டைடல் பூங்காவில்உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அங்கு பணியாற்றும் இன்னொரு சாப்ட்வேர்என்ஜினியரை காதலித்தார்.

இதுகுறித்து அபிதாவின் வீட்டுக்குத் தெரியவந்தது. இதையடுத்து அவரை வேலைக்குப் போக வேண்டாம் என்றுகூறி தடுத்துள்ளனர்.

இருப்பினும் தனது காதலில் உறுதியாக இருந்த அபிதா தனது காதலரைத் தேடி அவரது வீடு உள்ளதிருவான்மியூருக்குச் சென்றார்.

ஆனா, காதல் காரணமாக ஏற்பட்ட மோதல்களால் வெறுத்துப் போயிருந்த காதலர், இனிமேல் என்னைப் பார்க்கவர வேண்டாம், இந்தக் காதலும் வேண்டாம் என்று அபிதாவிடம் கூறி விட்டதாகத் தெரிகிறது.

இதனால் மனம் உடைந்து போன அபிதா, தனது நெருங்கிய தோழிக்கு போன் செய்து பேசியுள்ளார். அப்போதுஅழுதபடி பேசிய அபிதா, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், தனது வீட்டில் சொல்லிவிடும்படியும் கூறி விட்டு அருகில் இருந்த ஐந்து மாடிக் கட்டடத்திற்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்துதற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருவான்மியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+