சூட்கேஸ் திருடுவதே குடும்ப தொழில்: அப்பா-மகன்கள் மீண்டும் கைது: நிலுவையில் 60 வழக்குகள்
மதுரை:
60 கைது வாரண்டுகள் நிலுவையில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சூட்கேஸ் திருடர்கள் மதுரையில் கைதுசெய்யப்பட்டனர்.
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன்கள் கணேசன் மற்றும் முத்து. இந்தக் குடும்பத்தினரின்வேலையே ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், ரயில்களில் சூட்கேஸ்கள், பேக்குகள் ஆகியவற்றைதிருடுவதுதானாம்.
தந்தையும் இரு மகன்களும் சேர்ந்தே இந்த வேலைகளைச் செய்து வந்துள்ளனர்.
இவர்கள் மீது மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் மட்டும் 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகம்முழுவதும் மொத்தம் 60 கைது வாரண்டுகள் நிலுவையில் உள்ளன.
கடந்த மாதம் சென்னையில் சூட்கேஸ் திருடியபோது, சென்னை ரயில்வே போலீஸார் இவர்களைக் கைதுசெய்தனர்.
சில நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியில் வந்தனர். இந் நிலையில் நேற்று சென்னையிலிருந்து வந்தரயில்வே போலீஸார்,3 பேரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
இன்னொரு சூட்கேஸ் திருட்டுத் தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
திருடிவிட்டு உள்ளே போவது, பின்னர் வெளியே வந்து மீண்டும் கைதாகும் வரை சூட்கேஸ்களைத் திருடுவது எனஇக் குடும்பம் மிக ஜாலியாக வாழ்ந்து கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications