மெரீனா கடற்கரை கட்டடங்கள் இடிப்பை எதிர்த்து ஸ்டாலின் வழக்கு
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கட்டடங்களை இடித்து வரும் மாநில அரசின் செயல்களுக்கு தடைவிதிக்கக் கோரி திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில்,
மெரீனா கடற்கரையில் இருந்த சீரணி அரங்கம் நள்ளிரவில் மிகவும் ரகசியமாக இடிக்கப்பட்டுள்ளது. அதேபோல,கடற்கரையில் இருந்த நீச்சல்குளத்தின் ஒரு பகுதி, சுராங்கனி ஹோட்டல், புகாரி ஹோட்டல் ஆகியவையும்இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து அண்ணா சமாதியையும் எம்.ஜி.ஆர். சமாதியையும் இடிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.இவையெல்லாம் பொது மக்களின் பணத்தில் கட்டப்பட்டவை.
ஆனால், மத்திய அரசின் சுற்றுச்சூழல் சட்டத்தையும் மீறி நள்ளிரவில் இடிப்புகள் தொடர்ந்து கொண்டுள்ளன.எனவே மெரீனா கடற்கரையில் உள்ள தனிக் கட்டடங்களை இடிக்கக் கூடாது, அப்படியே இடிப்பதாகஇருந்தாலும் உரிய காரணத்தைச் சொல்ல வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இந்க மனுவை அவசர மனுவாகக் கருதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications