For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பை குண்டு வெடிப்பை நடத்தியது பெண் தீவிரவாதி!!!

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

மும்பையில் நேற்று நடந்த இரு குண்டு வெடிப்புகளில், ஒன்றை நடத்தியது பெண் தீவிரவாதி என்று தெரியவந்துள்ளது. இவர் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியாக இருக்கலாம் என மத்திய உளவுப்பிரிவுகள் சந்தேகிக்கின்றன.

நேற்று கேட் வே ஆப் இந்தியா அருகே வெடித்த குண்டை காரில் ஏற்றியது ஒரு பெண் என்பதுஉறுதியாகிவிட்டது.

மும்பையின் புறநகரான அந்தேரி பகுதியில் ஒரு ஆணும் பெண்ணும் சிவ்நாராயண் வாசுதேவ் பாண்டே என்றடிரைவர் ஓட்டி வந்த டாக்சியில் ஏறியுள்ளனர். அவர்களது பெட்டியை டிக்கியில் வைத்துள்ளனர். இதில் தான்குண்டு இருந்ததாகத் தெரிகிறது.

பின்னர் காரை கேட் வே ஆப் இந்தியா பகுதிக்கு ஓட்டச் சொல்லியுள்ளனர். பாண்டேயும் காரை ஓட்டியுள்ளார்.

வழியில் தோபி தலோ என்ற இடத்தில் காரில் இருந்த ஆண் மட்டும் இறங்கிக் கொண்டார். ஆனால், அந்தப் பெண்தொடர்ந்து கேட் வே ஆப் இந்தியா பகுதிக்கு காரை செலுத்தக் கூறியுள்ளார்.

அங்கு சென்றவுடன், நான் மதிய உணவருந்திவிட்டு வருகிறேன். மீண்டும் பயணத்தைத் தொடர வேண்டும்.இங்கேயே இரு என டிரைவரிடம் கூறிவிட்டு அந்தப் பெண் இறங்கிச் சென்றுள்ளார். இதையடுத்து டிரைவரும்இறங்கி டீ சாப்பிடச் சென்றுள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில் பயங்கரமான அந்த குண்டு வெடிப்பு நடந்தது. இதையடுத்து பல கார்களும் உடைந்துசிதறிவிட, தனது கார் என்ன ஆனது என்று பார்க்கச் சென்றுள்ளார் பாண்டே.

ஆனால், அவரது கார் சுக்கு நூறாகிப் போய் இருந்தது. கார் இருந்த தடமே இல்லாத அளவுக்கு உடைந்துதுகள்களாக சிதறியிருந்தது. இதனால் அந்தக் காரில் தான் குண்டு இருந்தது தெரியவந்தது. போலீஸ்விசாரணையிலும் அந்தக் காரில் குண்டு இருந்தது உறுதியானது.

இதையடுத்து பாண்டே தானாகவே போலீசாரிடம் சென்று நடந்த சம்பவத்தைக் கூறினார்.

இதே போல தன்ஜி பஜார் அருகே நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையே டாக்சியும் மும்பை புறநகரைச்சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது. இதனால் இந்தத் தீவிரவாதக் கும்பல் புறநகரில் தான் இயங்கி வருவதாகத்தெரிகிறது.

இதைத் தொடர்ந்து மும்பை புற நகர்ப் பகுதிகளைச் சேர்ந்த 3 பேர் விசாரணைக்காக போலீசாரால் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் செயல்பாடுகள் கடந்த சில மாதங்களாக மும்பையில் அதிகரித்துவந்ததாகவும், அந்த அமைப்பு தான் இந்த குண்டு வெடிப்பை நடத்தியிருக்க வேண்டும் எனவும் போலீசார்கருதுகின்றனர்.

மத்திய உளவுப் பிரிவுகளான ஐ.பி மற்றும் ரா ஆகியவையும் இதையே மாநில போலீசாரிடம் தெரிவித்துள்ளன.லஷ்கர் அமைப்பில் பெண் தீவிரவாதிகள் இருப்பதாகவும் அவர்கள் தற்கொலைப் படையினர் அல்ல, அதேநேரத்தில் சதி வேலைகளுக்கு உதவியாக இருந்துவிட்டு தலைமறைவாகிவிடும் திறன் படைத்தவர்கள் என மும்பைபோலீசாருக்கு ஏற்கனவே ஐ.பி. அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இப்போது கிட்டத்தட்ட அதே போன்ற சம்பவம் தான் நடந்துள்ளது.

இந்த சதிச் செயலை மேற்கொள்ள லஷ்கர் அமைப்புக்கு சிமி (Students islamic movement of India) மற்றும் தாவூத்இப்ராகிம் கும்பலும் உதவியிருக்கலாம் என்று தெரிகிறது. முழு விசாரணைக்குப் பிறகே இது யாருடைய கைவரிசைஎன்பது தெளிவாகத் தெரிய வரும் என துணைப் பிரதமர் அத்வானி தெரிவித்தார். பெரும்பாலும் லஷ்கர்-சிமியின்வேலையாக இருக்கலாம் என்றார்.

இதற்கிடையே குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆகிவிட்டது. காயமடைந்தவர்கள் 150 பேர்.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்என மகாராஷ்டிர முதல்வர் சுசில் குமார் ஷிண்டே அறிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X