வினாயகர் ஊர்வலத்தை தடை செய்ய முயற்சி: ராம.கோபாலன் புகார்
சென்னை:
வினாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைத் தடுக்க சில சக்திகள் முயற்சி செய்வதாக இந்து முன்னணிஅமைப்பாளர் ராம.கோபாலன் புகார் கூறியுள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
வினாயகர் சதுர்த்தி நிறைவு தினத்தன்று சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பதுஎங்களின் பிறப்புரிமை. ஆனால், மதக் கலவரம் உருவாகும் என்று கூறி சில சக்திகள் அதைத் தடுக்கநினைக்கின்ற.
இந்த ஆண்டு சென்னை நகரில் மொத்தம் 5,008 வினாயகர் சிலைகள் வைக்கப்படவுள்ளன. வரும்31ம் தேதி பூஜை ஆரம்பித்து ஒரு வார காலத்திற்கு நடைபெறும்.
வரும் 7ம் தேதி வினாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட கடலில் கரைக்கப்படும்.
வினாயகர் சிலை ஊர்வலம் என்பது வெறும் சடங்கு அல்ல. அது நமது பாரம்பயத்தின் வெளிப்பாடு.வழக்கம் போல இந்துக்களுக்கு எதிராக பேசி வரும் திமுக தலைவர் கருணாநிதி, பசு வதைத் தடுப்புச்சட்டத்தையும் கேலி பேசுகிறார்.
இந்தச் சட்டம் வந்தால் பல லட்சம் பேரின் வேலை வாய்ப்பு பறிபோகும் என்கிறார். அவர்எப்போதுமே இந்துக்களுக்கு விரோதமாகவே பேசுபவர் என்பதால் பசு வதைச் சட்டத்தைஎதிர்ப்பதிலும் ஆச்சரியம் இல்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications