கோவில் யானைகளுக்கு புது வாழ்வு கொடுக்கும் ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோவில் யானைகளை சிறந்த முறையில் பராமரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் முதல்வர்ஜெயலலிதா.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள்சரிவர பராமக்கப்படுதில்லை என்று எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இனிமேல் கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளை சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.இதற்கானசில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கோவில்களில் உள்ள யானைகள் கல் தளம் அல்லது சிமென்ட் தளத்தில் நிறுத்தப்படக்கூடாது. இவ்வாறு நிறுத்துவதால் யானைகளின் கால்களில் கொப்புளம் ஏற்பட்டு, புண்ணாகியானைக்குப் பாதிப்பு ஏற்படுகிறதப.

எனவே இனிமேல், வெறும் மண் தரை அல்லது புல் வெளிகளில்தான் யானைகள் நிறுத்திவைக்கப்பட வேண்டும்.

மேலும் வருடத்திற்கு ஒருமுறை கோவில் யானைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம்நலவாழ்வு முகாம் நடத்தப்படும். இதன் மூலம் யானைகளின் உடல் நலம் பேணப்படும்.

வருடத்திற்கு ஒரு மாதம் யானைகளுக்கு முழு ஓய்வு கொடுக்கப்பட வேண்டும். அந்த ஒரு மாதகாலமும் யானைகளுக்கு எந்த வேலையும் கொடுக்கக் கூடாது.

யானைகளை எப்படிப் பராமரிப்பது என்பது குறித்து அறிந்து வர கேரள மாநிலம் குருவாயூருக்குஇந்து சமய அறநலையத்துறை அதிகாகள் குழு சென்றுவர உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் யானைகளை சிறப்பாக பராமரிப்பது தொடர்பாக பாகன்களுக்கு பயிற்சி வகுப்புகள்நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+