காங்கிரசின் பிரித்தாளும் சூழ்ச்சி: பா.ஜ.க. தாக்கு
சென்னை:
வாக்கு வங்கியை மனதில் கொண்டு இந்துக்களையும், முஸ்லீம்களையும் -நிரந்தரமாகப் பி-ரித்துவைக்க -நினைக்கிறது காங்கிரஸ் என்று தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டி-னார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பாரதீய ஜனதாக் கட்சி முஸ்லீம்களுக்கு எதிரானதல்ல. தீவிரவாதத்தை மட்டுமே அது
எதிர்த்து வருகிறது. ஆனால், பா.ஜ.க. முஸ்லீம்களுக்கு விரோதமான கட்சி என்ற பெயரை உருவாக்ககாங்கிரஸ் முயற்சிக்கிறது. இந்த உண்மையை --முஸ்லீம் மக்கள் பு-ரிந்து கொள்வார்கள்.
ஆங்கிலேயர் காலத்தில் இந்திய மக்களிடையே ஒற்றுமை ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காகபி-ரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். அதே பாணியைத்தான் இன்றும் கடைப்பிடித்துவருகிறது காங்கிரஸ் கட்சி.
இந்துக்களும், முஸ்லீம்களும் ஒற்றுமையாக வாழ்ந்தால் தங்களுக்கு ஆட்சிப் பொறுப்பு கிடைக்காது,வாழ்வு இல்லை என்பதால் அவர்களுக்கிடையே மோதலை உருவாக்கி அதில் குளிர்காயநினைக்கிறது காங்கிரஸ் என்றார்.


