ரேஷன் கடைகளில் செப். 1 முதல் ஆணுறைகள் விற்பனை!!
சென்னை:
செப்டம்பர் 1ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ஆணுறைகள் (காண்டம்) விற்கப்படவுள்ளன.
தமிழ்நாடு எய்ட்ஸ் நோய்க் கட்டுப்பாட்டுக் கழகம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.
இதுதொடர்பாக திட்ட இயக்குனர் தீனபந்து நிருபர்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதிலும் உள்ள 2,000 நியாயவிலைக் கடைகளிலும் ஆணுறைகள் விற்கப்படும்.
இந்துஸ்தான் லேட்டக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிரோத் உள்ளிட்ட அனைத்து வகையான தரம் வாய்ந்த ஆணுறைவகைகளும் ரேஷன் கடைகளில் கிடைக்கும். ஒவ்வொரு கடையிலும், ஒவ்வொரு வகையையும் சேர்ந்த 30பாக்கெட்டுகள் வரை விற்பனைக்கு வைக்கப்படும்.
எந்தக் கடையிலும் ஆணுறை ஸ்டாக் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் உடனுக்குடன் சப்ளையும்இருக்கும்.
மூட்ஸ் வகை ஆணுறையின் விலை ஒரு பாக்கெட்டிற்கு ரூ. 10 ஆக இருக்கும். இந்த பாக்கெட்டில் 3 ஆணுறைகள்இருக்கும். அதேபோல, 3 ஆணுறைகள் அடங்கிய ரூ. 5 விலை கொண்ட ரக்ஷக் மற்றும் உஸ்தாத் வகைஆணுறைகளும் ரேஷன் கடைகளில் கிடைக்கும் என்றார் அவர்.
கடந்த ஏப்ரல் 3ம் தேதி சட்டசபையில் சுகாதாரத் துறை அமைச்சர் செம்மலை பேசுகையில், ரேஷன் கடைகள் மூலம்ஆணுறைகள் விற்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications