ஸ்ரீநகருக்குப் பதில் இன்று ஆத்தூர் போகிறார் ஜெ.
சென்னை:
ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநரிகல் இன்று பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடைபெறவுள்ளமாநிலங்களிடை கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை.
மாறாக சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடக்கும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்.
ஸ்ரீநகரில் நடக்கும் மாநிலங்களிடைக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் பொன்னையன் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
ஆத்தூரில் இன்று பிற்பகல் நடக்கும் நிகழ்ச்சியில், ரூ.386 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் மற்றும்வளர்ச்சித் திட்டப் பணிகளை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.
ஆத்தூர் நரசிங்கபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு மைதானத்தில் இதற்காக பிரமாண்டமான பந்தல்அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு சபாநிாயகர் காளிமுத்து தலைமை தாங்குகிறார். கல்வித்துறை அமைச்சர்செம்மலை முன்னிலை வகிக்கிறார்.
சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஜெயலலிதா ஆத்தூர் செல்கிறார். கோட்டைக்கு எதிரே புதிதாகஅமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இருந்து அவரது ஹெலிகாப்டர் கிளம்பும்.


