லாரி மீது ரயில் மோதி டிரைவர் சாவு: திண்டுக்கல்லில் ரயில் போக்குவரத்து பாதிப்பு
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே மணல் ஏற்றிச் சென்ற அரை பாடி லாரியின் மீது ரயில் மோதியது. இதில் லாரியின் டிரைவர்அந்த இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.
ரெட்டியார் சத்திரம் என்ற இடத்தில் ஆளில்லா ரயில்வே கேட் உள்ளது. இன்று காலை இந்த இடத்தில்மதுரை-கோவை பாஸஞ்சர் ரயில் வந்து கொண்டிருந்தது.
அப்போது மணல் ஏற்றிய அரைபாடி லாரி தண்டவாளத்தைக் கடக்க முயன்றது. ரயில் வருவதைப் பார்த்தும் கூடலாரியை நிறுத்தாமல் தண்டவளாத்தின் மீது லாரியை ஓட்டியுள்ளார் டிரைவர்.
இதையடுத்துப் பதறிப் போன ரயிலின் டிரைவர் அவசர பிரேக்கைப் போட்டார். ஆனாலும், சில நொடிகளில்தண்டவளாரத்தில் இருந்த லாரியின் மீது ரயில் மோதியது. அத்தோடு சுமார் 10 மீட்டர் தூரத்துக்கு லாரியைஇழுத்துச் சென்றது.
இதில் லாரி உடைந்து சுக்குநூறானது. அதில் இருந்த டிரைவர் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தையடுத்து திண்டுக்கல் வழியாகச் செல்லும் ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


