வேலை நாட்கள் விடுப்பு நாட்களாக அறிவிப்பு: அரசுக்கு ஊழியர் சங்கங்கள் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வேலை நிறுத்தம் செய்த நாட்களை விடுப்பு நாட்களாக மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளதற்கு பல்வேறு ஊழியர்சங்கங்கள் அதிருப்தியும், ஆட்சேபனையும் தெரிவித்துள்ளன.

வேலை நிறுத்தம் செய்த ஊழியர்கள், ஆசிரியர்களில் 6,072 பேர் தவிர மற்ற அனைவரையும் வேலைக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும், அவர்களுக்கு ஜூலை 25ம் தேதி முதல் சம்பளம் தர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்திருந்தது.

இந் நிலையில் ஜூலை 25ம் தேதிக்குப் பிறகு வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு, அவர்கள் வராத நாட்களைசம்பளத்துடன் கூடிய விடுப்பு நாட்களாக அரசு அறிவித்தது. இதற்கு அரசு ஊழியர் சங்கங்கள் அதிருப்திதெவித்துள்ளன.

இதுகுறித்து தமிழக அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஸ்ரீதரன் கூறுகையில், தமிழக அரசின் உத்தரவு ஆகஸ்ட் 6ம்தேதி பிறப்பிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் அமைந்துள்ளது.

ஜூலை 25ம் தேதி முதலான கால கட்டத்தை வேலை நாட்களாகத்தான் அரசு கருத வேண்டும். காரணம்,ஊழியர்கள் வேலைக்கு வரத் தயாராக இருந்தும் அரசுதான் அவர்களை அனுமதிக்காமல் காலம் தாழ்த்திக்கொண்டிருந்தது.

மேலும், பணியில் சேர்க்கப்பட்ட 8,063 ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் ஆகஸ்ட் 11ம் தேதியே பணியில்சேர்ந்து விட்டனர். எனவே அவர்கள் அரசின் உத்தரவால் பாதிக்கப்படுவர். எனவே முதல்வர் ஜெயலலிதா இதைமறு பசீலனை செய்து, உத்தரவை மாற்ற வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+