நெய்வேலி சுரங்கத்தில் மீண்டும் திருட்டு முயற்சி: பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு

Subscribe to Oneindia Tamil

நெய்வேலி:

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் கிட்டங்கியை உடைத்து திருட முயன்ற பெரும் கும்பல் மீது அங்கு பாதுகாப்புக்குஇருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் துப்பாத்திச் சூடு நடத்தினர். சமீப காலத்தில் நிலக்கரிசுரங்கத்துக்குள் நடந்துள்ள இரண்டாவது துப்பாக்கிச் சூடு இது.

துப்பாக்கிச் சூட்டையும் மீறி ரூ. 2 லட்சம் மதிப்புள்ள குழாய்கள் மற்றும் சில கருவிகளை அக் கும்பல் திருடிச்சென்றுவிட்டது. அதே நேரத்தில் பல கோடி மதிப்புள்ள பொருள்கள் காப்பாற்றப்பட்டுவிட்டன.

நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் சுரங்கத்தின் கிட்டங்கியின் அருகே ஆள் நடமாட்டம் இருப்பதைப் பார்த்ததொழில்துறை பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். அப்போது 40 பேர் கொண்ட ஒரு கும்பல்கிட்டங்கியை உடைத்து பொருள்களை எடுத்துக் கொண்டிருந்தது.

அக் கும்பலை படையினர் நெருங்கியபோது, அவர்கள் கற்களால் வீசித் தாக்க ஆரம்பித்தனர். இதையடுத்துஅவர்களை நோக்கி படையினர் சுட்டனர். இதில் ஒருவன் படுகாயமடைந்தான். அவனை மற்றவர்கள் தூக்கிக்கொண்டு ஓடி சுரங்கத்தின் இன்னொரு பகுதிக்குச் சென்று இருட்டில் மறைந்து தப்பிவிட்டனர்.

இதையடுத்து கிட்டங்கியை சோதனையிட்டபோது ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடு போனதுதெரியவந்தது. பாதுகாப்புப் படையினர் அங்கு வருவதற்கு முன்னதாகவே இவற்றை அக் கும்பல் சுரங்கத்துக்குவெளியே கொண்டு போய், அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மூலம் கடத்திச் சென்றுவிட்டன.

இந்தக் கிட்டங்கியில் பல கோடியளவுக்கு மின்னணுக் கருவிகள், மின்சாரக் கருவிகள், எந்திரங்கள், அதன்பாகங்கள் வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்தியதால் தான் இவை காப்பாற்றப்பட்டதாக தொழில்துறைபாதுகாப்புப் படையின் கமாண்டர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திருட்டுக் கும்பலுக்கும் தொழில்துறை பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏதாவதுஅண்டர்ஸ்டான்டிங் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. துப்பாக்கியால் சுட்டும் கூட, 40 பேர் கொண்டகும்பலில் ஒருவரைக் கூட பிடிக்காதது ஏன் என்று தெரியவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு தான் இதே போன்ற ஒரு சம்பவம் நெய்வேலி சுரங்கப் பகுதியில் நடந்தது.

இந்தத் திருட்டு குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+