டெண்டுல்கரின் பரிசு காரை பறிமுதல் செய்யக் கோரி வழக்கு
சென்னை:
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்ட காரை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்காக விதிமுறைகளை தளர்த்தியதை எதிர்த்தும், அதற்கு உரிய வரி கட்டாமல் டெண்டுல்கர்இழுத்தடித்ததால் காரை பறிமுதல் செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.
சென்னை சிஐடி காலனியைச் சேர்ந்த குப்பையா என்பவர் இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள பொது நல ரிட்மனுவில்,
சச்சின் டெண்டுல்கர் அதிக டெஸ்ட் சதங்களை எடுத்ததற்காக அவரைப் பாராட்டி பீயட் நிறுவனம் scarlet Ferrari 360Modena ரக காரை பரிசாக அளித்தது. கடந்த ஆண்டு மே மாதம் இந்தக் காரை இங்கிலாந்தில் பெற்றுக் கொண்டார்டெண்டுல்கர்.
மும்பைக்கு அனுப்பப்பட்ட இந்தக் காருக்கு சுங்க வரியான ரூ. 1.13 கோடி தளர்த்தப்பட்டது. வெளிநாட்டு காரைஇறக்குமதி செய்வது தொடர்பான விதிமுறைகள் எதுவும் டெண்டுல்கர் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை.
இது சட்டத்திற்கு புறம்பான செயல். சென்னை அல்லது கொல்கத்தா மூலமாகத்தான் இந்தக் கார் இந்தியாவுக்குள்அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யப்படவில்லை.
மேலும், இந்திய மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட கார் எந்தவித சோதனைக்கும்உட்படுத்தப்படவில்லை. டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த சிறப்புச் சலுகை, இந்திய மக்களுக்குஅளிக்கப்பட்டுள்ள சம உரிமையை மீறுவதாக அமைந்துள்ளது.
இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் சொல்லியாக வேண்டும்.
டெண்டுல்கரின் காருக்கு அளிக்கப்பட்ட சலுகை சட்டத்திற்குப் புறம்பானது. எனவே இந்தக் காரை பறிமுதல் செய்யநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
இந்தக் காருக்கு சுங்க வரி செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தபோது டெண்டுல்கர் தரப்பில் ஆழ்ந்தமெனமே நிலவியது. இதையடுத்து பீயட் நிறுவனம் அந்த வரியைச் செலுத்த முன் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெண்டுல்கரின் இன்றைய சொத்து ரூ. 200 கோடிகளைத் தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்,
சட்டப்படியான சில லட்ச வரியைக் கூடசெலுத்தாமல் சிறப்புச் சலுகையைக் கேட்டுப் பெற்றுள்ளார்.
டெண்டுல்கருக்குக் காட்டப்பட்ட சலுகைக்கு கபில்தேவ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது நினைவுகூறத்தக்கது. தான்பரிசாக கார் பெற்றபோதெல்லாம் உரிய வரியைக் கட்டியே நாட்டுக்குள் கொண்டு வந்ததாக கபில் கூறியுள்ளார்.
டெண்டுல்கருக்குக் காட்டப்பட்ட இதே போன்ற சலுகை ஹாக்கி, மல்யுத்தம் போன்றவற்றில் உலக சாதனை படைத்தஇந்திய வீரர்களுக்கும் தரப்படுமா என்றும் கபில் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications