போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையன் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

வேலூர் அருகே போலீஸாரைத் தாக்கி விட்டுத் தப்ப முயன்ற கொள்ளையனை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

வேலூர் அருகே உள்ள கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்ற வங்கி அதிகாரியும் அவரது மனைவியும் சிலநாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டு வீட்டில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த இரட்டைக் கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் உள்பட 4 பேரை போலீஸார்கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, சித்தூரில் அந்த நகைகளை விற்றதாகத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பாஸ்கரன் உள்ளிட்டவர்களை போலீசார் வேன் மூலம்சித்தூருக்குக் கொண்டு சென்றனர்.

சித்தூர் செல்லும் வழியில், காட்பாடி அருகே, திடீரென்று பாஸ்கரன் போலீஸாரிடமிருந்து தப்ப முயன்றான்.போலீஸாரைத் தாக்கவும் முயன்ற அவரை போலீஸார் எச்சரித்தனர்.

ஆனால் போலீஸ் துப்பாக்கியில் இருந்த கத்தியை உருவி காவலர்களை அவன் சரமாரியாகத் தாக்கினார். இதைத்தொடர்ந்து போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் பாஸ்கரன் கொல்லப்பட்டான்.

காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 பேரும் வேலூர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+