5 ஆண்டுகளில் இந்திய விண்கலம் நிலவைத் தொடும்: இஸ்ரோ
திருவனந்தபுரம்
இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவின் முதல் நிலவுப் பயணம் மேற்கொள்ளப்படும் என்று இந்திய அறிவியல்ஆய்வுக் கழகத்தின் தற்காலிகத் தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிலவை நோக்கிநமது முதல் விண்கலம் பயணமாகும். இதற்கான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டது. விண்கலவடிவமைப்பு மற்றும் சோதனைகள் தொடங்கி நடந்து வருகின்றன.
விண்கலத்திற்கான இரண்டு என்ஜின்கள் சோதித்துப் பார்க்கப்பட்டு விட்டன. கிரையோஜெனிக் இயந்திர சோதனைவிரைவில் நடைபெறவுள்ளது.
கல்வி தொடர்பான செயற்கைக் கோளான எடுசாட் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும். இந்த செயற்கைக்கோள், இந்தியாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகங்கள், இந்திய அறிவியல் கழகம் மற்றும் முக்கிய கல்விநிறுவனங்களை ஒருங்கிணைக்கும்.
அதேபோல, தொலைக் கல்வியும் பிரபலமடைந்து வருகிறது. ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இந்த செயற்கைக்கோள் வழி தொலை கல்விக்கு நல்ல ஆதரவு உள்ளது.
இஸ்ரோவின் விண்வெளித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலை மருத்துவ தொழில்நுட்பத்தையும்முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிகப் பெரிய மருத்துவமனைகளின் சேவைகளைசாதாரண குடிமகனும் பயன்படுத்தும் வாய்ப்பு இதன் மூலம் கிடேைக்கும். மேலும் மருத்துவர்களோ,மருத்தவமனைகளோ இல்லாத தொலை தூர கிராம மக்களும் தொலை மருத்துவ முறை மூலம் மருத்துவ வசதியைப்பெற முடியும்.
கூடுதல் உந்து சக்தியுடன் கூடிய செயற்கைக் கோள் செலுத்தும் வாகனங்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில்தயாரிக்கப்படும். கடந்த 25 ஆண்டுகளில் நாம் செய்த சாதனைகளை விட கூடுதலாக இன்னும் ஐந்து ஆண்டுகளில்விண்வெளித்துறையில் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
தற்போது 100 டிரான்ஸ்பாண்டர்களை இஸ்ரோ விண்வெளியில் செலுத்தியுள்ளது. இதை அடுத்த இரண்டுஆண்டுகளில் இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல ஆளில்லாத விண்வெளிக் கலங்களை ஏவும் திட்டமும் உள்ளது. அமெரிக்காவின் கொலம்பியாவிண்கலத்திற்கு நேர்ந்த கதியிலிருந்து நாம் சில பாடங்களைக் கற்றுக் கொள்ள முடிந்துள்ளது என்றார் நாயர்.
நாயர் தற்போது விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநராகவும் உள்ளார்.


