For Daily Alerts
Just In
கெளரவ ரேஷன் கார்டு தேவையற்றது: மு. கண்ணப்பன்
கோவை:
ரூ. 5,000க்கு மேல் சம்பளம் வாங்குவோருக்கு கெளரவ ரேஷன் அட்டை வழங்கப்படும் என தமிழக அரசுபிறப்பித்துள்ள உத்தரவு வாபஸ் பெறப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் கண்ணப்பன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாதம் ரூ. 5,000க்கு மேல் வருமானம் உடையோர், வருமான வரிகட்டுவோர் ஆகியோருக்கு இனிமேல் ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடையாது என்று கூறுவது நியாயமற்றது.
இந்த உத்தரவால், ரூ. 5,000க்கு மேல் வருமானம் பெறும் நடுத்தர வர்க்க ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள்உள்ளிட்டோர் பெரும் பாதிப்படைவார்கள். எனவே பழைய முறையே தொடர அரசு வகை செய்ய வேண்டும்.
கோவில்களில் ஆடு, கோழி பலியிடத் தடை விதித்துள்ளது தேவையற்ற செயலாகும் என்றார் அவர்.


