மன நலம் பாதித்த மகளுடன் விசாரணைக்கு வந்த அரசு ஊழியை
செப்டம்பர் 03, 2003
மன நலம் பாதித்த மகளுடன் விசாரணைக்கு வந்த அரசு ஊழியை
சென்னை:
மன நலம் பாதித்த மகளுடன் இன்று 3 நீதிபதிகள் குழுவின் விசாரணைக்கு ஆஜர் ஆனார் டிஸ்மிஸ்செய்யப்பட்ட அரசு ஊழியை.
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6072 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின்வழக்கை ஓய்வு பெற்ற 3 உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரித்து வருகிறது. இன்று நடந்த 3வதுநாள் விசாரணையின்போது, தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர், கூட்டுறவுத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த 139 பேர் விசாரணைக்குவந்திருந்தனர்.
அப்போது பிற்படுத்தப்பட்டோர் துறையில் பணியாற்றும் பத்மாவதி என்ற ஊழியை தனது 10 வயதுமகள் ரம்யாவுடன் விசாரணைக்கு வந்திருந்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், எனதுமகள் ரம்யாவுக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை கொடுத்து வருகிறோம்.இதற்காக விடுப்பு எடுத்திருந்தேன். ஆனால் என்னை டிஸ்மிஸ் செய்துள்ளனர். எனவே அதற்கானஆதாரங்கள் மற்றும் எனது மகளையும் நீதிபதியிடம் ஆஜர் செய்ய அவரையும் அழைத்துவந்துள்ளேன் என்றார்.


