For Daily Alerts
Just In
பாக்.சிறையிலிருந்து 269 இந்திய மீனவர்கள் விடுதலை
கராச்சி:
பாகிஸ்தான் சிறையில் கடந்த ஒரு வருடமாக அடைக்கப்பட்டிருந்த 269 இந்திய மீனவர்களைபாகிஸ்தான் இன்று விடுதலை செய்தது.
பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்திய மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக இந்திய மற்றும்பாகிஸ்தான் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்து ஒப்பந்தம் உருவானது.
இதன் அடிப்படையில், கராச்சி சிறையில் கடந்த ஒரு வருடமாக அடைக்கப்பட்டிருந்த 269 இந்தியமீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டு இந்தியாவின் முதன்மை செயலாளர் ஆர்.கே.சர்மாவின்முன்னிலையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சட்டவிரோதமாக பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் புகுந்ததாக கூறி அவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இதேபோல, இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 94 பாகிஸ்தான்மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அப்போது சர்மா தெரிவித்தார்.


