விநாயகர் சிலை ஊர்வலத்திற்குத் தடை இல்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம்மறுத்து விட்டது.
சென்னை கடலில் விநாயகர் சிலைகளைக் கரைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், மீன் வளம்அழிந்து விடும், மேலும் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டால் மத மோதல் ஏற்படலாம்என்பதால் அதைத் தடை செய்யக் கோரி வக்கீல் இளங்கோவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி குலசேகரன் ஆகியோர் முன்புவிசாரணைக்கு வந்தது. அப்போது, விநாயகர் சிலைகளை கடலில் கரைத்தால் ஏற்படும்பாதிப்புகளைத் தடுக்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே விநாயகர் சிலைகள்ஊர்வலத்திற்குத் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications