கள்ளக்காதலைத் தட்டிக் கேட்ட மகனுக்குத் தீவைத்த தந்தை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

கள்ளக்காதலை கைவிடுமாறு கூறிய மகனை தந்தை தீவைத்து எரித்தார். தீயில் கருகிய மகன்தந்தையையும் கட்டிப் பிடித்ததால், தந்தை இறந்தார். மகன் உயிருக்குப் போராடி வருகிறார்.

மதுரை செல்லூர் அகிம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன் சரவணன். அப்பகுதியில்மெக்கானிக் கடை வைத்துள்ளார். முத்துவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும்இடையே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.

இதை அறிந்த சரவணன், கள்ளத் தொடர்பை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால் அதைகண்டுகொள்ளாத முத்து, தொடர்ந்து தொடர்பு வைத்துள்ளார். மேலும் வீட்டுக்கும் பணம்கொடுக்காமல் அந்தப் பெண்ணுக்காக செலவு செய்து வந்துள்ளார்.

இதுதொடர்பாக பலமுறை சொல்லியும் கேட்காத தந்தையிடம் மிகவும் கடுமையாக பேசியுள்ளார்சரவணன். இதனால் ஆத்திரமடைந்த முத்து, தனது மகனைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். இன்றுகாலை வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த சரவணன் மீது, மண்ணெண்ணையை ஊற்றிதீவைத்துள்ளார் முத்து.

தீயில் கருகத் தொடங்கிய சரவணன், கோபமடைந்து, தனது தந்தையை இறுக கட்டிப் பிடித்துக்கொண்டார். இதில் இருவரும் கருகினர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை ராஜாஜி அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முத்து இறந்தார்.சரவணன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+