நாளை இரவு வருகிறார் முரசொலி மாறன்
சென்னை:
மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நாளை இரவு சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் முரசொலிமாறன், பின்னர் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.அங்கு சென்ற பிறகும் கூட அவரது உடல் நிலையில் முன்னேற்றம் தென்படவில்லை.
இந்த நிலையில் அவரை மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்து இங்குள்ள ராமச்சந்திராமருத்துவமனையில் வைத்து தொடர்ந்து சிகிச்சை தர அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து இந்திய நேரப்படி இன்று இரவு அமெரிக்காவிலிருந்து தனி விமானம் மூலம் முரசொலிமாறன் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். நாளை இரவு அவர் இங்கு வந்து சேருவார்.
வந்தவுடன் நேராக ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவார். அங்குஅவருக்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்று விடாமல் பாதுகாக்கும்பொருட்டு விசேஷ வசதிகளும், 24 மணி நேரமும் டாக்டர்கள் செயல்படுவதற்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications