அமைச்சர் கார் மோதி கணவன், மனைவி படுகாயம்
தூத்துக்குடி:
கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் கார் மோதி கணவன், மனைவி படுகாயம்அடைந்தனர்.
நெல்லையைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் தூத்துக்குடி அணல் மின் நிலையத்தில் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி மரியாள் என்ற மேரி. இவர்கள் அணல் மின் நிலைய குடியிருப்பில்வசிக்கிறார்கள்.
சனிக்கிழமை மாலை தனது மோட்டார் சைக்கிளில் மனைவியுடன், முத்தையாபுரம் பகுதியில் வந்துகொண்டிருந்தார் பிரேம் குமார். அப்போது அவர்களுக்குப் பின்னால் வேகமாக வந்த டாடா சுமா கார்மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
உடனடியாக இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீஸார்விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். காரில் வந்தது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின்உதவியாளர் மற்றும் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சின்னத்துரை ஆகியோர்பயணித்தது தெரியவந்தது.
இதையடுத்து தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தம்பதிகள் மோதியவர்கள் மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications